Sunday, May 24, 2009

காணொளி : இது யார் பத்மநாதன் ? தலைவரா ?







ஐடென்டிடி காட் ஐடென்டிடி காட்..

ஐடென்டிடி காட் இங்க வை இங்க காட்டு

தம்பி இந்தபக்கம் கொஞ்சம் திருப்பு , இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்
(பலரது பேச்சுகள் கேட்கின்றன )

யாரோடதோ தெரியல்ல கிடைச்சது அடிச்சதுதான் ( இது அடிச்ச ஆயுதத்தை குறிக்கிறதோ அடிபட்ட நபரை குறிக்கிறதோ தெரிய வில்லை )

இவன் பேசினான் (ஏசினான் ) சரணடயிரவங்களுக்கு

யாரு பேசினான் ?

இவன்தான்.

தலைக்கு அடிச்சது யாரு ?

ஆ ...?

தலைக்கு யாரு அடிச்சது ?

நாங்கதான் அடிச்சது ...........(மற்றைய சொல் விளங்கவில்லை )

Well Done .well Done

இவன் பேசினான் ஆம்பிளண்டா ஏண்டா வாறீங்க, எண்டு சரணடயிரவங்களுக்கு ஏசினான்


இல்லை ?

(ஏனையவை விளங்கவில்லை )

பிரபா ..!.......பிரபா.....!.........(ஏளனமாக அழைக்கிறார்கள் )

எல்லோரும் சிரிக்கிறார்கள்

சரி சரி எடுத்துட்டு போங்க பிள்ளைகள் (சிங்களத்தில் லமாய் என்றால் பிள்ளைகள் ,சமயத்தில் உயரதிகாரிகள் தங்களுக்கு கீளுள்ளவர்களையும் அழைப்பார்கள்)

கொஞ்சம் இரு கொஞ்சம் இரு

வாங்க பாத்துட்டு இருக்காங்க (காத்திருக்கிறார்கள் )

இதோ இத காட்டு .......

அத்தோடு முடிகிறது



இதுதான் இலங்கை அரசாங்கம் தலைவரது உடல் என்று சொல்லி வெளியிட்ட உடலும் காணொளியும், ஆனால் அவர்கள் இதிலுள்ள் உரையாடல்களை வெளியிடவில்லை.

இது ஒரு இராணுவவீரரின் செல்லிடப்பேசியினாலோ அல்லது வேறு ஒரு கமெராவினால் எடுக்கப்பட்டுள்ளது.

மிகவும் தெளிவான காணொளி.

எல்லோரும் சொன்னது போல அது ஒரு மாஸ்க் இல்லை உண்மையான உடல்தான்

ஆனால் அதிலுள்ள உரையாடல்களை கேட்கும்போதுதான் ஒரு சந்தேகம் வருகிறது

அவ்வுரையாடல்களின்படி

இந்த நபர் ஒளிந்திருக்கவில்லை , வெளியில் இருந்துகொண்டு இராணுவத்துக்கு ஏசியிருக்கிறார் ,வேண்டுமென்றே இராணுவத்தை தனதுபக்கம் அழைத்திருக்கிறார்

அவர்கள் மூலம் அடிபட்டு இறந்திருக்கிறார், சரியாக தலைவரைப்போலவே இருக்கிறார்

தலைவருக்கு என்ன பைத்தியமா, சும்மா பாதையால போற இராணுவத்த கூப்பிட்டு அடிவாங்கி சாக
அவரிடமென்ன துப்பாக்கியில்லையா? சயனைட் இல்லியா ? சாக வேணுமென்றால் எவ்வளவு தற்கொலை வழியிருக்கிறது..?
ராணுவத்த கூப்பிட்டு சாகவேண்டுமா ?

இராணுவம் ஏன் சண்டையில் கொல்லப்பட்டதாகவும் நந்திக்கடலடியில் உடலை கண்டு பிடித்ததாகவும் சொன்னார்கள்?

இவன் எங்கள் ராணுவத்தை கூப்பிட்டான் ஏசினான் அதனால் ராணுவம் சுட்டது அல்லது அடித்தது என்று சொல்லவில்லை ?


ஆக இதில் ஏதோ தில்லு முல்லு இருக்கிறது .

இந்த தில்லுமுல்லை செய்தது இராணுவமில்லை , புலிகளாகத்தான் இருக்கவேண்டும் .

இராணுவத்தை நன்றாக ஏமாத்தியிருக்கிறார்கள் என்றுதான் நினைக்க தோன்றுகிறது

ராணுவத்தை திசைதிருப்பி விடுவதற்காக தலைவரைப்போலவே ஒருவரை உருவாக்கி வைத்திருக்கலாம் .

அவராகவே போய் அடிபட்டு வீரமரணம் அடைந்திருக்கலாம்.

ஆனால் இராணுவமோ தாம் எமாந்திருப்பதை அறியாமல் ஆரம்பத்தில் கூச்சல் போட்டிருக்கிறார்கள், சந்தோசப்பட்டிருக்கிறார்கள்.
இந்த காணொளி இந்நபரை அடித்த உடனேயே பதிவு செய்யப்பட்டதாகும்
இரத்தக்கறை கூட கிடக்கிறது. அதனால்தான் தலையையும் நன்றாக திருப்புகிறார்கள்.

பின்னர் கொஞ்சம் யோசித்துப்பார்த்தபின்புதான் ஒருவேளை உண்மை விளங்கியிருக்கும் .

அதனால்தான் உடலை கொழும்புக்கு கொண்டுவராமல் டி என் ஏ பரிசோதனையும் பண்ணாமல் எரித்திருக்கிறார்கள்.

இதனை ஒரு சிங்களவரே பதிவேற்றி இருக்கிறார், எனக்கு முகப்புத்தகம் மூலம் வந்தது

அதிலே ஒருவர்

Something wrong somewhere என்றும்

இன்னொருவர் "நல்லது ஆனால் இந்த பதிவை எடுத்துவிடு" என்றும் பின்னூட்டமிட்டிருக்கிறார்கள். ஏன் அது..?


எனக்கு என்னவோ தலைவன் இருக்கிறான் என்றுதான் விளங்குகிறது

இல்லை ஏதோ ஒன்று நடந்துள்ளது, நடக்கிறது . எதுவும் நன்றாக நடந்தால் சரி

இதைவிட இன்னும் தெளிவான காணொளி உள்ளது. தேவையானவர்கள் தொடர்புகொள்ளவும்
unmaimukam@gmail.com

வேறு , பதிவு சம்பந்தமான உங்கள் கருத்துக்களையும் அனுப்பலாம்.

13 comments:

  1. நெஞ்சை உலுக்கும் உண்மை...
    நன்றி தோழா..

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ஒண்ணுமே புரியலை உலகத்துலே.. என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது..

    உண்மைமுகம் ஸார்..

    அந்த இன்னொரு காணொளியையும் வெளியிடுங்களேன்..

    ReplyDelete
  4. என்ன கொடுமை சார் !

    ReplyDelete
  5. நான் புதிதாக ப்ளாக் திறந்துள்ளேன் அதில் பின்னூட்டம் (post comment) இணைப்பது எப்படி என்று தெரியவில்லை உதவுவீர்களா
    என்னுடைய ப்ளாக் பெயர் http://softwarebaskets.blogspot.com/
    நன்றி

    ReplyDelete
  6. நிறைய சந்தேகங்கள் இல்லாமலில்லை....

    வழக்கமாக அவர் அணிந்திருக்கும் இடுப்புப் பட்டையோ அல்லது சயனைடு குப்பியோ இந்த படக்காட்சியில் காணக்கிடைக்கவில்லை. அடையாள அட்டை, அடையாள வில்லை மாதிரியான சமாச்சாரங்கள் இருக்கும் போது அவரின் இடுப்பு பட்டை, கை கடிகாரம், சயனைடு குப்பிகள் எங்கே போனது....

    ReplyDelete
  7. Please share the rest of the vedios.
    Thanks,
    Ravee.

    My mail ID : raveendrans@gmail.com

    ReplyDelete
  8. hai.. plz send me that video to vnchandru@gmail.com..

    thanks..

    ReplyDelete
  9. இவன் பேசினான் (ஏசினான் ) பாதையால் போறவங்களுக்கு (அதாவது ஆமிக்காரனுகளுக்கு
    that is not பாதையால் போறவங்களுக்கு what i hear is "those who surendaring" (bharavena ayatta and not pare ena ayatta)

    ReplyDelete
  10. ஆமாம் பார்த்திபன் நீங்கள் சொல்வது சரிதான், அது எனது பிழைதான் மன்னிக்கவும். அவர் சரணடைபவர்களுக்குதான் ஏசியிருக்கிறார். அவ்வளவாக சிங்களத்தில் யோசிக்க தெரியவில்லை , இதனை வெளியிடவேனுமேன்ர ஆர்வத்தில் அதை சரியாக கவனிக்க வில்லை.
    ஆகவே இங்கு இது இன்னும் சந்தேகத்தை வலுக்க செய்கிறது , எங்கோ எதோ ஒன்னு நடந்துள்ளது .

    இது உண்மையிலேயே தலைவராக இருக்கும் பட்சத்தில், ஒரு துரோகம் ஒரு காட்டிக்கொடுப்பு , நம்பவைத்து கழுத்தறுத்தல் நடந்துள்ளது.

    சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

    ReplyDelete
  11. hai.. plz send me that video to selvabn@gmail.com..

    thanks..

    ReplyDelete