Monday, May 25, 2009

தலைவர் / தலைவரை போலுள்ளவர் சுட்டுக்கொல்லப்படவில்லை-திருத்தப்பட்டது

எனது நேற்றைய பதிவுக்கும் , பல பதிவர்களின் கேள்விகள் அலசல்கள் என்பவற்றுக்குமான ஒரு பதிலாக இத்தனை எழுதலாமென்று நினைக்கிறேன்.

முதலில் எல்லோரும் அந்த காணொளியை சரியாக பார்தீர்களா ?, அதிலேசிங்கள இராணுவம் கதைப்பதற்கான அர்த்தம் தெரியுமா ? அதைவைத்துஏதாவது சிந்த்தித்து பார்த்தீர்களா ?

அவர்கள் கதைப்பதெல்லாம் நாடகமல்ல உண்மையாக அவர்களது சந்தோசத்தின் வெளிப்பாடு, தனது வீரத்தை ஒருவன் சொல்ல மற்றவனிடமிருந்து வெல் டன்.......வெல் டன் என்ற பாராட்டு கிடைக்கிறது.


அதிலே ஒருவன் சொல்கிறான், " இவன் ஏசினான் சரணடயிரவங்களுக்கு, ஆம்பிளண்டா ஏண்டா சரணடயிறீங்க எண்டு .

அப்போது மற்றவன் கேக்கிறான் யாரு தலையில் அடித்தது ?

தலையில் வெடி வைத்தது யாரு என்று கேக்கவில்லை. அடித்தது யாரு ? என்றுதான் கேக்கிறான்.

ஆக அங்கெ பிணமாக கிடப்பவர் பேசி இருக்கிறார். இதற்க்குஇரண்டு வழிகள் இருக்கின்றன.

ஒன்று உயிருடன் பிடிபட்டிருக்கும்போது சரணடைபவர்களை பார்த்து கேட்டிருக்கலாம்.


அது உண்மையிலேயே தலைவராக இருந்தால் பிடிபட வாய்ப்புகள் குறைவு .
ஒருவேளை (அப்படி நடந்திருக்க கூடாது என்பதுதான் எனது பிரார்த்தனைகள் )
எதோ ஒரு மூன்றாம் தரப்பை நம்பி சரணடைந்து இருக்கலாம், சரணடைவுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன என்பது எல்லோருக்கும்தெரியும் . அப்படி சரணடைந்திருக்கும் பொது அவரது கண்ணின் முன்னால் எதோ நடந்திருக்கிறது . (எனக்கு இந்த பயத்தைதமிழரங்கம்ஏற்படுத்திவிட்டது ) அவரிடமுள்ள ஆயுதங்கள் பறிக்கப்பட்டு நிராயுதபாணியாக வைக்கப்பட்டிருந்திருக்கலாம்.


சரணடையும்
போது அடையாள அட்டைகள் தேவைப்பட்டிருக்கலாம், மூன்றாம் தரப்பென்றால் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டி இருந்திருக்கும்.

சரணடைபவர்களுக்கு ஏசினார் என்றால் அவர் சரணடைந்திருக்க முடியாது, பிடிபட்டிருந்திருக்க வேணும். அல்லது தான் சரணடைந்தது தவறு என்பதை உணர்ந்து மற்றவர்களை தடுத்திருக்கலாம்.

எதுவாக இருந்தாலும் ஆமிக்கு கேட்கும்படிதான் கதைத்திருக்கிறார் எனவே பக்கத்தில் தான் நின்றிருக்கவேண்டும்.


பதினேழாம் திகதி இலங்கை இராணுவம் தலைவர் கொல்லப்பட்டதாக அறிவித்ததும், எல்லாம்தெரிந்த பத்மநாதன், தலைவர் சாகவில்லை என்று சொல்லியிருக்கிறார். ஏனென்றால் அவர்தானே மூன்றாம் தரப்பை கொண்டுவந்தது , ஆகவே ஒன்றும் நடக்காது என்று நம்பி அந்த பேட்டியை அளித்திருக்கலாம்.
ஆனால் அடுத்தநாள் அரசாங்கத்தின் திட்டப்படி எல்லாம் நடந்திருக்கும்.


இரண்டாவது , அந்த நபர் தலைவரைபோலவே உருவ ஒற்றுமை கொண்டஒருவராக இருக்கலாம், அவர் சரணடைந்து மேலே சொன்னபடி ஏதாவது பேசி அடிக்கப்பட்டிருக்கலாம். அல்லது சும்மா ராணுவத்துக்கு தெரியுமாறுவெளியில் நின்று ஏதாவது பேசி இருக்கலாம் ஒரு திசை திருப்பலாக.

இந்த காணொளி கொலை நடந்த உடனேயே எடுக்கப்பட்டது . இரத்தக்கறைகூட காயவில்லை. அதாவது பத்தொன்பதாம் திகதி காலையில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் . பத்மநாதனின் கருத்துப்படி அவர்பதினேழாம் திகதி என்று கூறுகிறார், அதற்க்கு வாய்ப்பே இல்லை. இலங்கை இராணுவம் அன்றுதான் அம்புலன்ஸ் புருடா விட்டது, அப்படிஎன்றால் அவர்கள் இந்த காணொளியை அன்றே வெளியிட்டிருப்பார்கள்.

எது எப்படியோ , அது தலைவரோ, தலைவரைப்போல் ஒருவரோ ,அந்நபர் சுட்டுக்கொல்லப்படவில்லை
மிக அருகில் வைத்து அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்.

அதன்பிறகு , நந்திக்கடல், சேறு , சண்டை , கருணா , தயா மாஸ்டர் என்ற நாடகங்கள் அரங்கேறியிருக்கும்.

அது தலைவராக இருந்தால் இறுதிப்போர் சமயத்தில் ஒரு மிகப்பெரிய சதி, துரோகம் , நம்பவைத்து கழுத்தறுத்தல், பேரம் பேசல் நடந்துள்ளது.

இது காலப்போக்கில் தெரிய வரலாம் இல்லை அப்படியே அழிந்து போகலாம்.

எமக்கு நன்கு அறிந்த தலைவர்கள் தளபதிகள் யாரும், வெளியில் வந்து உண்மை உரைக்காதவரை, பத்மநாதனயோ, அறிவழகனயோ எம்மால் நம்ப முடியாது. தெரிந்தோ தெரியாமலோ புலிகள் இருந்தால்தான் போராட்டம் நடத்தமுடியும் என்று பழக்கப்பட்டு விட்டோம் எனவே புலம்பெயர் மக்கள் தலைவர் இல்லையென்று நினைத்துக்கொண்டு தங்களையே தலைமையாக நினைத்துக்கொண்டு தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டியதுதான், இன்னும் வீரியத்துடன்.

பத்மநாதனின் அறிவிப்பு உங்களை, உங்களின் போராட்டங்களை அடக்கி ஒரு சோர்வு நிலைக்கு தள்ளுவதற்கான ஒரு அழுத்தத்தினால் வந்திருக்கலாம். தலைவருக்கு வீரவணக்கம் செலுத்துங்கள் ஆனால் இப்போது நீங்கள் செய்யும் போராட்டத்தின் பல மடங்கு வீரியத்துடன் அது இருக்க வேண்டும் அதையே தொடர வேண்டும், அவர்கள் எது நினைத்தார்களோ அதற்க்கு எதிராய் இருக்கவேண்டும் உங்கள் நடவடிக்கைகள் . தலைவரே போய்ட்டார் இனியென்ன இருக்கு என்று நீங்கள் பலர் கேட்பது தெரியும் ஆனால் தலைவரே இதைதான் விரும்பினார் இந்த சண்டை தொடங்கிய நாளிலிருந்து வன்னியிலிருந்து வந்த பேட்டிகளில் உங்களுக்காக வந்த அழைப்பு என்ன ? உங்களால்தான் முடியும் என்பதுதானே ? அவர் உங்களைதான் , அடுத்த தலைமுறையைதான் நம்பியிருந்தார். நீங்கள் ஏற்றும் ஈகைசுடர் தலைவனை சந்தோசப்படுத்தாது, உங்களின் போராட்டத்தீ தான் அவரை சந்தோசப்படுத்தும்.

தலைவர் இருந்தால் உங்கள் முன் தோன்றுவார்.

நன்றி.












Sunday, May 24, 2009

காணொளி : இது யார் பத்மநாதன் ? தலைவரா ?







ஐடென்டிடி காட் ஐடென்டிடி காட்..

ஐடென்டிடி காட் இங்க வை இங்க காட்டு

தம்பி இந்தபக்கம் கொஞ்சம் திருப்பு , இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்
(பலரது பேச்சுகள் கேட்கின்றன )

யாரோடதோ தெரியல்ல கிடைச்சது அடிச்சதுதான் ( இது அடிச்ச ஆயுதத்தை குறிக்கிறதோ அடிபட்ட நபரை குறிக்கிறதோ தெரிய வில்லை )

இவன் பேசினான் (ஏசினான் ) சரணடயிரவங்களுக்கு

யாரு பேசினான் ?

இவன்தான்.

தலைக்கு அடிச்சது யாரு ?

ஆ ...?

தலைக்கு யாரு அடிச்சது ?

நாங்கதான் அடிச்சது ...........(மற்றைய சொல் விளங்கவில்லை )

Well Done .well Done

இவன் பேசினான் ஆம்பிளண்டா ஏண்டா வாறீங்க, எண்டு சரணடயிரவங்களுக்கு ஏசினான்


இல்லை ?

(ஏனையவை விளங்கவில்லை )

பிரபா ..!.......பிரபா.....!.........(ஏளனமாக அழைக்கிறார்கள் )

எல்லோரும் சிரிக்கிறார்கள்

சரி சரி எடுத்துட்டு போங்க பிள்ளைகள் (சிங்களத்தில் லமாய் என்றால் பிள்ளைகள் ,சமயத்தில் உயரதிகாரிகள் தங்களுக்கு கீளுள்ளவர்களையும் அழைப்பார்கள்)

கொஞ்சம் இரு கொஞ்சம் இரு

வாங்க பாத்துட்டு இருக்காங்க (காத்திருக்கிறார்கள் )

இதோ இத காட்டு .......

அத்தோடு முடிகிறது



இதுதான் இலங்கை அரசாங்கம் தலைவரது உடல் என்று சொல்லி வெளியிட்ட உடலும் காணொளியும், ஆனால் அவர்கள் இதிலுள்ள் உரையாடல்களை வெளியிடவில்லை.

இது ஒரு இராணுவவீரரின் செல்லிடப்பேசியினாலோ அல்லது வேறு ஒரு கமெராவினால் எடுக்கப்பட்டுள்ளது.

மிகவும் தெளிவான காணொளி.

எல்லோரும் சொன்னது போல அது ஒரு மாஸ்க் இல்லை உண்மையான உடல்தான்

ஆனால் அதிலுள்ள உரையாடல்களை கேட்கும்போதுதான் ஒரு சந்தேகம் வருகிறது

அவ்வுரையாடல்களின்படி

இந்த நபர் ஒளிந்திருக்கவில்லை , வெளியில் இருந்துகொண்டு இராணுவத்துக்கு ஏசியிருக்கிறார் ,வேண்டுமென்றே இராணுவத்தை தனதுபக்கம் அழைத்திருக்கிறார்

அவர்கள் மூலம் அடிபட்டு இறந்திருக்கிறார், சரியாக தலைவரைப்போலவே இருக்கிறார்

தலைவருக்கு என்ன பைத்தியமா, சும்மா பாதையால போற இராணுவத்த கூப்பிட்டு அடிவாங்கி சாக
அவரிடமென்ன துப்பாக்கியில்லையா? சயனைட் இல்லியா ? சாக வேணுமென்றால் எவ்வளவு தற்கொலை வழியிருக்கிறது..?
ராணுவத்த கூப்பிட்டு சாகவேண்டுமா ?

இராணுவம் ஏன் சண்டையில் கொல்லப்பட்டதாகவும் நந்திக்கடலடியில் உடலை கண்டு பிடித்ததாகவும் சொன்னார்கள்?

இவன் எங்கள் ராணுவத்தை கூப்பிட்டான் ஏசினான் அதனால் ராணுவம் சுட்டது அல்லது அடித்தது என்று சொல்லவில்லை ?


ஆக இதில் ஏதோ தில்லு முல்லு இருக்கிறது .

இந்த தில்லுமுல்லை செய்தது இராணுவமில்லை , புலிகளாகத்தான் இருக்கவேண்டும் .

இராணுவத்தை நன்றாக ஏமாத்தியிருக்கிறார்கள் என்றுதான் நினைக்க தோன்றுகிறது

ராணுவத்தை திசைதிருப்பி விடுவதற்காக தலைவரைப்போலவே ஒருவரை உருவாக்கி வைத்திருக்கலாம் .

அவராகவே போய் அடிபட்டு வீரமரணம் அடைந்திருக்கலாம்.

ஆனால் இராணுவமோ தாம் எமாந்திருப்பதை அறியாமல் ஆரம்பத்தில் கூச்சல் போட்டிருக்கிறார்கள், சந்தோசப்பட்டிருக்கிறார்கள்.
இந்த காணொளி இந்நபரை அடித்த உடனேயே பதிவு செய்யப்பட்டதாகும்
இரத்தக்கறை கூட கிடக்கிறது. அதனால்தான் தலையையும் நன்றாக திருப்புகிறார்கள்.

பின்னர் கொஞ்சம் யோசித்துப்பார்த்தபின்புதான் ஒருவேளை உண்மை விளங்கியிருக்கும் .

அதனால்தான் உடலை கொழும்புக்கு கொண்டுவராமல் டி என் ஏ பரிசோதனையும் பண்ணாமல் எரித்திருக்கிறார்கள்.

இதனை ஒரு சிங்களவரே பதிவேற்றி இருக்கிறார், எனக்கு முகப்புத்தகம் மூலம் வந்தது

அதிலே ஒருவர்

Something wrong somewhere என்றும்

இன்னொருவர் "நல்லது ஆனால் இந்த பதிவை எடுத்துவிடு" என்றும் பின்னூட்டமிட்டிருக்கிறார்கள். ஏன் அது..?


எனக்கு என்னவோ தலைவன் இருக்கிறான் என்றுதான் விளங்குகிறது

இல்லை ஏதோ ஒன்று நடந்துள்ளது, நடக்கிறது . எதுவும் நன்றாக நடந்தால் சரி

இதைவிட இன்னும் தெளிவான காணொளி உள்ளது. தேவையானவர்கள் தொடர்புகொள்ளவும்
unmaimukam@gmail.com

வேறு , பதிவு சம்பந்தமான உங்கள் கருத்துக்களையும் அனுப்பலாம்.

Saturday, May 23, 2009

உண்மை முகம்

இது ஒரு சோதனைப்பதிவு, நான் ஏற்கனவே பதிவுலகத்திலுள்ள பதிவர்தான், ஆனால் இலங்கயிலிருந்துகொண்டு இதனை பதிவிட முடியாதாகையால் புதிதாக ஒரு வலைப்பதிவை தொடங்கியிருக்கிறேன்.

இன்னும் சில மணி நேரங்களில் ஒரு காணொளி வர இருக்கிறது இதனை எத்தனை பேர் பார்த்தார்கள் என்று தெரியவில்லை.

தலைவர் அவர்களின் உடலை காட்டும் பொது அதனருகில் நின்ற சிப்பாய்களின் பேச்சுக்களடங்கிய அந்த காணொளி, பல சந்தேகங்களை கிளப்புகிறது.

சிங்களத்திலுள்ள அந்த உரையாடல்களை தமிழ் படுத்துகிறேன் பின்னர் வெளியிடுகிறேன்.
அதனை பார்க்காதவர்கள் உடனடியாக பின்னூட்டமிடவும்.

நன்றி